மும்பை மாநகராட்சியிடம் ரூ.58 ஆயிரம் கோடி இருந்தாலும் நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது-மத்திய மந்திரி நிதின் கட்காரி சாடல்
மாநகராட்சியிடம் ரூ.58 ஆயிரம் கோடி இருந்தபோதிலும் மும்பை நகரம் வெள்ளத்தில் மிதப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி குற்றம்சாட்டினார்.
மும்பை,
நாட்டின் பணக்கார மாநகராட்சியாக மும்பை கருதப்படுகிறது. ஆனால் நகரின் கட்டமைப்பு வசதி திருப்திகரமாக இல்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். சமீபத்தில் பெய்த கனமழையின் போது மும்பை நகரம் வெள்ளத்தில் மிதந்தது. இதனால் மக்கள் பரிதவிக்க வேண்டியதாயிற்று.
மும்பை மாநகராட்சி பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா வசம் உள்ளது. இந்த நிலையில் மும்பை மாநகராட்சியை பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் கப்பல் துறை மந்திரியுமான நிதின் கட்காரி வசைப்பாடி உள்ளார்.
இதுகுறித்து மும்பை கோராய் பகுதியில் சதுப்பு நில பூங்காவின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் பூமி பூஜை செய்து விழாவில் பேசியதாவது:-
மும்பை மாநகராட்சியிடம் ரூ.58 ஆயிரம் கோடி நிலையான வைப்பு தொகை இருப்பதாக கேள்வி பட்டேன். ஆனால் ஒவ்வொரு ஆண்டின் மழைக்காலத்தின் போதும் மும்பை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. மழைநீருக்கு அடியில் சாலை செல்கிறது. இது தான் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. கடலில் கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கடல் மாசு அடைகிறது. இந்த கழிவு நீரை சுத்திகரிக்க மாநகராட்சி தன்னிடம் இருக்கும் நிதியை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் மாநகராட்சியை விமர்சித்து பேசினார்.
மேலும் நிதின் கட்காரி கூறியதாவது:-
மும்பை பெருநகர பகுதிகளில் இருந்து புதிதாக கட்டப்படும் நவிமும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் வகையில் தண்ணீர் டாக்சி திட்டம் தன்னிடம் உள்ளது. இந்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் ஒருவர் தான் தங்கியிருக்கும் ஓட்டலில் இருந்து படகை எடுத்து கொண்டு நேரடியாக விமான நிலையத்துக்கு சென்று விடலாம். அதுபோன்ற திட்டம் தன்னிடம் தயாராக இருக்கிறது. நவிமும்பை சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும்போது, வசாய்-விரார், கல்யாண் மற்றும் பிவண்டி நகரங்களில் இருந்து அந்த விமான நிலையத்துக்கு தண்ணீர் டாக்சியில் செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் மந்திரி வினோத் தாவ்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story