மாவட்ட செய்திகள்

திருமருகல் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் அதிகாரி ஆய்வு + "||" + Development Planning Officer Study at Tirumarugal Union

திருமருகல் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் அதிகாரி ஆய்வு

திருமருகல் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் அதிகாரி ஆய்வு
திருமருகல் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
திருமருகல்,

திருமருகல் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தியாகராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருமருகல் ஒன்றியத்தை சேர்ந்த கீழப்பூதனூர் ஊராட்சியில் ரூ.32 லட்சம் சமுதாய கூடம் கட்டும் பணிகள், விற்குடி ஊராட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் படுகை குளம் மற்றும் ஆண்டித்தோப்பு குளம் தூர்வாரும் பணிகளை திட்ட இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அப்போது பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசு, இளங்கோவன், ஒன்றிய பொறியாளர்கள் செல்வம், சிவ குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரமூர்த்தி, தமிழ்செல்வி, சுரேஷ்குமார், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் ராமகிருஷ்ணன், சுகுமார், மற்றும் ஊராட்சி செயலர்கள் உடனிருந்தனர்.