மாவட்ட செய்திகள்

ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் கலெக்டர் தகவல் + "||" + Credit Collector Information with 50% grant for setting up of deep well

ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் கலெக்டர் தகவல்

ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் கலெக்டர் தகவல்
ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.
தஞ்சாவூர்,

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்தி கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. சாதிச்சான்று, வருமானச்சான்று மற்றும் இருப்பிட சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றிதழை தாசில்தாரிடம் இருந்து பெற வேண்டும்.

தகுதி

நில உடமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இருக்க வேண்டும். தகுதியுடைய விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி பயன்பெறலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.