தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி - போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்


தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி - போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
x
தினத்தந்தி 18 Aug 2019 3:15 AM IST (Updated: 18 Aug 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாதாந்திர கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தலைமை தாங்கினார். அவர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிகுமார் உள்ளிட்ட 27 பேருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இந்த கூட்டத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, தூத்துக்குடி நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பால்துரை, விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story