முதுமலை சாலையோரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரிப்பு; உணவுக்காக காத்திருக்கும் அவலம்
முதுமலை சாலையோரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அவை சுற்றுலா பயணிகளை உணவுக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் அவல நிலையை காண முடிகிறது.
கூடலூர்,
கூடலூர், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டுயானைகள், புலிகள், செந்நாய்கள், காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் மயில்கள், கருங்குரங்குகள், மலைப்பாம்புகள், ராஜநாகங்கள், எறும்புதின்னிகள் உள்ளிட்ட உயிரினங்களும் அதிகளவு உள்ளன. இந்த நிலையில் மைசூரு- கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை வனப்பகுதி உள்ளது. இதனால் முதுமலை, கூடலூர் வழியாக ஊட்டிக்கு ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது.
இது தவிர சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவு வருகின்றன. காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரம் வந்து புற்களை மேய்வதை அடிக்கடி காண முடியும். இதை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். அப்போது ஆர்வ மிகுதியால் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வந்துள்ள தின்பண்டங்களை குரங்குகள், மான்கள், மயில்களுக்கு வழங்கி மகிழ்கின்றனர். இதனால் சாலையோரம் குரங்கள், மான்கள், மயில்கள் அதிகளவு வருகிறது.
வனச்சட்டத்தின்படி வனவிலங்குகள் மற்றும் வன உயிரினங்களுக்கு தாங்கள் கொண்டு வரும் உணவுகளை கொடுக்கக்கூடாது என்று சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர். இருப்பினும் சுற்றுலா பயணிகளின் உணவுகளை மயில்கள், குரங்குகள் தின்று பழகி விட்டன. இதேபோல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளும் குரங்குகளுக்கு வாழைப்பழங்களை வீசி எறிந்து விட்டு செல்வது வாடிக்கை.
இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது. அனைத்து இடங்களிலும் வெள்ளபாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. மேலும் முக்கிய சாலைகளும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வரத்து அடியோடு நின்று விட்டது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டது. தற்போது கூடலூர் பகுதியில் மழை நின்று விட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் மெல்ல திரும்பி வருகிறது. பொதுமக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வெளியில் நடமாட தொடங்கி உள்ளனர்.
மழையால் வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது. முதுமலை சாலையோரங்களில் புற்கள் அதிகளவில் முளைத்து காணப்படுகின்றன. இதனால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஆனாலும் மயில்கள், குரங்கள் உள்ளிட்ட வன உயிரினங்கள் வனத்தின் கரையோரம் சுற்றுலா பயணிகளின் உணவு பொருட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. முதுமலை, கூடலூர் சாலையோரம் மயில்கள், குரங்குகளை கூட்டமாக காண முடிகிறது.
ஆனால் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் வன உயிரினங்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளன. இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில் கூறும்போது, தொடர்கன மழையால் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லை.
இதனால் தின்பண்டங்களை தின்று பழகிய வன உயிரினங்கள் அவர்களை எதிர்பார்த்து நிற்கின்றன. அதனால்தான் வன உயிரினங்களுக்கு உணவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது என்றனர்.

Related Tags :
Next Story