பைனான்சியர் கொலை வழக்கு: தலைமறைவானவர் ஜாமீனை ரத்து செய்ய மனு
பைனான்சியர் கொலை வழக்கில், தலைமறைவானவர் ஜாமீனை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சேலம்,
சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பைனான்சியர் சண்முகம். கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாதகாப்பட்டி சண்முகா நகரில் இவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கு தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல ரவுடிகளான கோழி பாஸ்கரன், வளத்திகுமார் உள்பட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கோழிபாஸ்கரன், ராஜா, நாகராஜ் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். நேற்று அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் வழக்கை தாமதப்படுத்த ஒவ்வொருவராக தலைமறைவாகி வருவதால் இந்த வழக்கில் உள்ள அனைவரது ஜாமீனையும் ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Related Tags :
Next Story