குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி சாவு - 2 பேர் கைது
குன்றத்தூர் அருகே குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த கொல்லச்சேரி பகுதியில் வசித்து வந்தவர் மோகன். சிக்குமுடி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் மாசாணி (வயது 5). கோயம்பேட்டில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சிப்காட்டிற்கு கொண்டு செல்லும் பணிக்காக குன்றத்தூர் போரூர் சாலையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் மாசாணி பலத்த காயம் அடைந்தாள். இதையடுத்து அருகில் படுத்து கொண்டிருந்த பெற்றோர் அலறியடித்து எழுந்து வெளியே ஓடிவந்து மற்றவர்கள் உதவியுடன் சிறுமியை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குன்றத்தூர் போலீசார் மாசாணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து பொக்லைன் எந்திர டிரைவர் அய்யப்பன் (32) மற்றும் அவரது உதவியாளர் உத்திரவேல் (22) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை கொல்லச்சேரி பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் பள்ளம் தோண்டி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பொக்லைன் எந்திரத்தின் ஒரு பகுதி மோகனின் வீட்டின் சுவர் மீது பட்டது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாசாணி மீது சுவர் இடிந்து விழுந்தது.
இதில் மாசாணி பலத்த காயம் அடைந்தாள். இதையடுத்து அருகில் படுத்து கொண்டிருந்த பெற்றோர் அலறியடித்து எழுந்து வெளியே ஓடிவந்து மற்றவர்கள் உதவியுடன் சிறுமியை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குன்றத்தூர் போலீசார் மாசாணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து பொக்லைன் எந்திர டிரைவர் அய்யப்பன் (32) மற்றும் அவரது உதவியாளர் உத்திரவேல் (22) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story