நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் திறந்துவிடப்படவில்லை - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் திறந்துவிடப்படவில்லை என அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
கவுந்தப்பாடி,
கவுந்தப்பாடி அருகே காட்டுவலசு வேலம்பாளையம், கவுந்தப்பாடிபுதூர் ஆகிய பகுதிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். மேலும் கவுந்தப்பாடிபுதூரில் ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர். கே.சி.கருப்பணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது அபராதம் விதிப்பது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் இருந்து மட்டும் குறைந்த அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. அதை தடுக்கவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் திறந்துவிடப்படவில்லை. இதையும் மீறி சாயக்கழிவு நீர் திறந்துவிடப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 24 மணி நேரம் நொய்யல் ஆற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
காகித ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை விவசாயத்துக்கு பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் தொழிற்சாலைகள் செயல்படுவதை கெடுக்கும் எண்ணம் கொண்ட சிலர் குற்றம் சாட்டுகின்றனர். காகித ஆலை கழிவுகள் நிலத்துக்கு உரமாக செயல்படுகிறது. இதனால் பவானிசாகர் பகுதியில் வாழைகள் நல்ல முறையில் விளைச்சல் பெற்று உள்ளன. ஆறு மாசுபடுவதை தடுக்க மத்திய அரசுடன் இணைந்து திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் எந்த ஒரு கழிவும் சுத்திகரிக்கப்படாமல் ஆறுகளில் கலக்க முடியாது. சித்தோடு முதல் கோபி வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.350 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு உள்ளது. சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும் என்று தெரிந்தவுடன், சிலர் நீதிமன்றத்துக்கு சென்று தடை உத்தரவு பெற்றுவிடுகின்றனர்.
ஈரோட்டை பிரித்து கோபியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்கும் நடவடிக்கை தற்போது எதுவும் இல்லை.
இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

Related Tags :
Next Story