விவசாயிகளை பாதிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது டி.டி.வி.தினகரன் பேட்டி


விவசாயிகளை பாதிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 18 Aug 2019 11:15 PM GMT (Updated: 18 Aug 2019 7:38 PM GMT)

விவசாயிகளை பாதிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

கபிஸ்தலம்,

விவசாயிகளை பாதிக்கும் வகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை விளை நிலங்களில் செயல்படுத்தக்கூடாது. இந்த திட்டங்கள் யாரையும் பாதிக்காத வண்ணம் கடலில் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியலில் வெற்றியும், தோல்வியும் சகஜம். எங்கள் தொண்டர்கள் யானை பலத்துடன் இருக்கிறார்கள். அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று எங்கள் பலத்தை காட்டுவோம். பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்திருந்தால் விலை உயர்வை தவிர்த்து இருக்கலாம்.

அக்கறை கிடையாது

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பால் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் மீது எந்த ஒரு அக்கறையும் கிடையாது. தமிழகத்தின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தை ஆள்பவர்கள், தங்கள் அரசை காப்பாற்றி கொள்வதற்கு மட்டுமே நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story