மாவட்ட செய்திகள்

எசாலம் கிராமத்தில், ரூ.25 லட்சத்தில் குடிநீர் கிணறு வெட்டும் பணி - அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார் + "||" + In Esalam village, Rs.25 lakh Drinking Water Well Cutting work

எசாலம் கிராமத்தில், ரூ.25 லட்சத்தில் குடிநீர் கிணறு வெட்டும் பணி - அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்

எசாலம் கிராமத்தில், ரூ.25 லட்சத்தில் குடிநீர் கிணறு வெட்டும் பணி - அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்
எசாலம் கிராமத்தில் ரூ.25 லட்சம் செலவில் திறந்தவெளி குடிநீர் கிணறு வெட்டும் பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.
விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி ஒன்றியம் எசாலம் கிராமத்தில் ரூ.25 லட்சம் செலவில் புதிதாக திறந்தவெளி குடிநீர் கிணறு மற்றும் குழாய்கள் அமைக்கும் பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

திட்ட இயக்குனர் மகேந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், மாநில அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எசாலம் பன்னீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் அறவாழி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ரூ.25 லட்சம் செலவில் திறந்தவெளி குடிநீர் கிணறு வெட்டும் பணி மற்றும் குழாய்கள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிந்தாமணி வேலு, கூட்டுறவு சங்க தலைவர்கள் சரவணக்குமார், லட்சுமி நாராயணன், நிர்வாகிகள் சண்முகசுந்தரம், அழகு, சங்கர், பெரியான், கிருஷ்ணன், ராமதாஸ், பூபாலன், பார்த்தசாரதி, முருகவேல், பாலமுருகன், பத்மநாபன், ஆறுமுகம், சுதாகர், பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.