மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் + "||" + Pudukkottai district farmers can apply for agricultural machinery at subsidized rates

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,

அதி நவீன தொழில்நுட்ப வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாய பணிகளுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையிலும் மற்றும் விவசாயிகளின் சொந்த பயன்பாட்டிற்கு புதிய வேளாண் எந்திரங்கள் அரசு மானியத்திலும் வாங்கி பயன்படுத்தி கொள்ள பல்வேறு திட்டங்கள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு டிராக்டர் மற்றும் இதர எந்திரங்கள், கருவிகளை வேளாண்மை பொறியியல் துறை மூலம் பெற்று கொள்ளலாம். நிலம் சமன்படுத்துதல், சீரமைத்தல் பணிகளுக்கு நிலமேம்பாட்டு திட்ட எந்திரங்களான பொக்லைன் எந்திரம் மணிக்கு ரூ.840 என்ற வாடகையிலும் மற்றும் உழவு பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள டிராக்டர்கள் மணிக்கு ரூ.340 என அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி உபகோட்டங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகளுக்கு மானியம்

புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல் பணிகளை மேற்கொள்ள சூழல் விசைத்துளை கருவிகள் ஒரு மீட்டருக்கு ரூ.130 வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவைப்படும் நவீன ரக வேளாண் கருவிகள், எந்திரங்கள் வாங்க 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மானியம் மற்றும் வட்டார, கிராம அளவில் வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் சேவை மையங்கள் அமைக்க 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை மானியம் அல்லது நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியத்தில் வேளாண்மை எந்திரமயமாக்கல் துணை இயக்க திட்ட நெறிமுறைகளின்படி விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட வேளாண் எந்திரங்களை வாடகைக்கு மற்றும் மானிய விலையில் பெற ஆர்வமுள்ள விவசாயிகள் புதுக்கோட்டையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகம், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் உதவி செயற் பொறியாளர் அலுவலகம், அறந்தாங்கி ராஜேந்திரபுரம் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.