பொட்டல்புதூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: த.மு.மு.க.வினர் 100 பேர் கைது


பொட்டல்புதூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: த.மு.மு.க.வினர் 100 பேர் கைது
x
தினத்தந்தி 19 Aug 2019 3:30 AM IST (Updated: 19 Aug 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே பொட்டல்புதூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.வினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடையம், 

காஷ்மீரில் 370 சிறப்பு அந்தஸ்து, 35 ஏ சட்ட பிரிவை நீக்கிய மத்திய அரசை கண்டித்து கடையம் அருகே பொட்டல்புதூர் பஜாரில் த.மு. மு.க.வினர் (தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்) நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கடையம் ஒன்றிய தலைவர் மதார்கனி லெப்பை தலைமை வகித்தார்.

மாநில செயற்குழு உறுப்பினர் மீரான் முகைதீன், மாவட்ட துணை செயலாளர் அபுபக்கர் சித்திக், மாவட்ட பொருளாளர் ரிப், ஒன்றிய செயலாளர் கோதர்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் நயினார் முகம்மது கண்டன உரையாற்றினார். மாவட்ட தலைவர் கோக்கர்ஜான் ஜமால், செயலாளர் கொலம்பஸ் மீரான் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதை தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் காஜாமைதீன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து த.மு.மு.க.வினர் 100 பேரை கைது செய்தனர்.

Next Story