தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை இன்றி கடும் வெயில் மக்களை வாட்டி வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. அவ்வப்போது லேசான மழையும் பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 44 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. நேற்று காலையில் வழக்கம் போல் வெயில் அடித்தது. ஆனால் மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் இதமான சூழல் நிலவியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஓட்டப்பிடாரம் -44, விளாத்திகுளம்-1, காடல்குடி-13, கோவில்பட்டி-19, கழுகுமலை-7, கீழஅரசடி-2.7, எட்டயபுரம்-36, சாத்தான்குளம்-3, தூத்துக்குடி-30.5.
Related Tags :
Next Story