மோகனூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு


மோகனூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 19 Aug 2019 4:00 AM IST (Updated: 19 Aug 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோகனூர்,

மோகனூர் அருகே உள்ள அணியாபுரம் புதூரை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது54). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை சுப்ரமணி வழக்கம் போல் மளிகை கடைக்கு சென்றுவிட்டார்.

அவருடைய மனைவி தீபா மதியம் வீட்டை பூட்டி விட்டு நாமக்கல் சென்று விட்டார். மாலையில் சுப்ரமணி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை திறந்து 15 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story