நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை சட்டம் பிரதமருக்கு, சிவசேனா வேண்டுகோள்


நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை சட்டம்   பிரதமருக்கு, சிவசேனா வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Aug 2019 5:39 AM IST (Updated: 19 Aug 2019 5:39 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை சட்டம் கொண்டு வரும்படி பிரதமருக்கு சிவசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

மும்பை,

சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திர தின உரையின்போது பிளாஸ்டிக் கழிவுகள் பிரச்சினை தொடர்பாக பேசியதற்காக பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிளாஸ்டிக் உற்பத்தி, பயன்பாடு மற்றும் விற்பனையை தடைசெய்வது காலத்தின் கட்டாயம்.

மராட்டியம் மற்றும் 20 மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதைச்சார்ந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மராட்டியத்தில் தடை விதிக்கப்பட்டதால், பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகி உள்ளது. இதன்மூலம் பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்கள் தயாரிக்கும் பணியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

எனவே நாடுமுழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க பிரதமர் மோடி சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story