அனல்மின் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை
தேசிய அனல்மின் நிறுவனத்தில் என்ஜினீயர்கள் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மின்நிறுவனமாக திகழ்கிறது தேசிய அனல்மின் நிறுவனம் (என்.டி.பி.சி.). மொத்தம் 55 ஆயிரத்து 786 மெகாவாட் திறன் கொண்டது. இது நாட்டின் மின் தேவையில் நான்கில் ஒரு பங்கை உற்பத்தி செய்கிறது. 2032-ம் ஆண்டிற்குள் 130 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் நோக்குடன் மின் உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்தியாவின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இது 14-வது இடம் வகிக்கிறது.
தற்போது இந்த நிறுவனத்தில் என்ஜினீயர்கள் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 203 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பிரிவு வாரியாக எலக்ட்ரிக்கல் பிரிவில் 75 பேரும், மெக்கானிக்கல் பிரிவில் 76 பேரும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 26 பேரும், இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவில் 26 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 102 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 56 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 30 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 15 இடங்களும் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். பணியிடங்கள் உள்ள என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப பாடப்பிரிவுகள், அவை சார்ந்த பாடப்பிரிவுகளில் படித்து பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டு பணி அனுபவம் அவசியமாகும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் வருகிற 26-ந் தேதியாகும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ntpccareers.net என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story