தி.மு.க. தடைகேட்டு தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றால் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு தயார் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி


தி.மு.க. தடைகேட்டு தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றால் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு தயார் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
x
தினத்தந்தி 19 Aug 2019 11:45 PM GMT (Updated: 19 Aug 2019 6:35 PM GMT)

தி.மு.க. தடைகேட்டு தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றால் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

கவுந்தப்பாடி,

கவுந்தப்பாடி பகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கேட்டு தி.மு.க வழக்கு தொடர்ந்துள்ளது. அதை திரும்ப பெற்றால் டிசம்பரில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது.

மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து 38 எம்.பிக்களை பெற்றுள்ளார். அவர்களால் மக்களுக்கு 38 பைசாவுக்கு கூட பயன் இல்லை.

தி.மு.க. தமிழகத்தில் 10 வருடங்களுக்கு ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. பால்விலை உயர்வு கட்டுபடியாகவில்லை என பால் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதற்கு சரியான நடவடிக்கை எடுப்பார். உதகையில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்படவில்லை. அதனால் நிலச்சரிவு ஏற்படவில்லை. அப்படி கட்டிடங்கள் கட்டியிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Next Story