மயிலாடுதுறை அருகே ரூ.40 லட்சத்தில் ஆறு-வாய்க்கால் தூர்வாரும் பணி பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் ஆய்வு
மயிலாடுதுறை அருகே ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஆறு மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குத்தாலம்,
மயிலாடுதுறை அருகே உள்ள கீழமருதாநல்லூர், ராதாநல்லூர், தர்மநாதபுரம் ஆகிய கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் ஆறு, வாய்க்கால் தூர்வாரும் பணிகள் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இதில் அய்யாவையனாறு, கொண்டத்தூர் வாய்க்கால், கொண்டத்தூர் மண்ணியாறு வடிகால் உள்ளிட்டவை தூர்வாரப்பட்டு வருகின்றன.
பொக்லின் எந்திரம் மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறையின் கூடுதல் செயலாளர் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
ஒத்துழைப்பு
மேலும் இந்த கிராமங்களில் குடிமராமத்து திட்டம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள குளங்கள், ஆறுகள், வாய்க்கால்களையும் கூடுதல் செயலாளர் பார்வையிட்டார். அப்போது பாசனதாரர் சங்கங்களை சேர்ந்த விவசாயிகளை சந்தித்து, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், கஜா மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு கூடுதல் திட்ட இயக்குனர் பிரதீப்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story