புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தல்


புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Aug 2019 4:15 AM IST (Updated: 20 Aug 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.

வேளாங்கண்ணி,

வேளாங்கண்ணியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் நாகை மாவட்ட 14-வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு தலைமை குழு உறுப்பினர் தேவகி தலைமை தாங்கினார். ஜெயா, சரோஜினி, முன்னாள் ஒன்றிய தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில நிர்வாகக்குழு உறுப்பினருமான செல்வராஜ், மாநில செயலாளர் பத்மாவதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நாடாளுமன்றம், சட்ட மன்ற தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு

குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். வேளாங்கண்ணி-நாகை இடையே பெண்களுக்கு தனி பஸ் இயக்க வேண்டும். புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட செயலாளர் மேகலா, மாநில பொருளாளர் ரேணுகா தாமஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், கீழையூர் ஒன்றிய செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story