மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளர் ‘சஸ்பெண்டு’ - கலெக்டர் உத்தரவு + "||" + Hearing bribes Secretary to the Panchayat 'Suspended'Collector's order

லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளர் ‘சஸ்பெண்டு’ - கலெக்டர் உத்தரவு

லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளர் ‘சஸ்பெண்டு’ - கலெக்டர் உத்தரவு
லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள நவாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி. இவர், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்ட அனுமதி கேட்டு கலசபாக்கம் ஒன்றியத்தில் விண்ணப்பித்து உள்ளார். வீடு கட்ட அனுமதி ஆணை வழங்க ரஜினியிடம் கங்கவரம் ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க மனமில்லாத ரஜினி, ரவிச்சந்திரன் லஞ்சம் கேட்ட ஆதாரத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியின் ‘வாட்ஸ் அப்’பிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுபற்றி விசாரித்து கலெக்டர் கந்தசாமி, ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. அர்ச்சகரை பணிநிரந்தரம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவில் நிர்வாக அலுவலர்- எழுத்தர் கைது
பெரம்பலூரில் தற்காலிக உதவி அர்ச்சகரை பணிநிரந்தரம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கோவில் நிர்வாக அலுவலர், எழுத்தர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
2. கொரோனா நோயாளி உடலை சவக்குழியில் வீசிய விவகாரம்; 3 ஊழியர்கள் சஸ்பெண்டு
புதுச்சேரியில் கொரோனா நோயாளி உடலை சவக்குழியில் வீசிய விவகாரத்தில் 3 ஊழியர்களை முதல் அமைச்சர் நாராயணசாமி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டு உள்ளார்.
3. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க லஞ்சம் கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம்
பந்தலூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க லஞ்சம் கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
4. ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் கைது
திருச்சியில் புதிய வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
5. நிலபத்திரத்தை விடுவிக்க விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் துணை கலெக்டர் கைது
நிலபத்திரத்தை விடுவிக்க விவசாயியிடம் இருந்து ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் தனித்துணை கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.76½ லட்சம் கைப்பற்றப்பட்டது.