மாவட்ட செய்திகள்

செந்துறை அருகே புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு + "||" + Public appeals to collector to protest new limestone mine

செந்துறை அருகே புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

செந்துறை அருகே புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
செந்துறை அருகே புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அளித்த 792 கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்மையில் நடைபெற்ற 15-வது மாநில அளவிலான தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் போட்டியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய 3 பிரிவுகளில் தங்க பதக்கம் வென்ற சிவகாமியை கலெக்டர் பாராட்டினார். இதை தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கு ரூ.12 ஆயிரத்து 735 மதிப்பில் இலவச தையல் எந்திரங்கள், 5 நபர்களுக்கு ரூ.26 ஆயிரத்து 250 மதிப்பில் இலவச சலவை பெட்டிகள், வருவாய்த்துறையின் சார்பில் 3 நபர்களுக்கு விதவைச் சான்றுகளை வழங்கினார்.


அனுமதி வழங்க கூடாது

கூட்டத்தில் அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் ஏற்கனவே பல சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் உள்ளன. இந்நிலையில் எங்கள் பகுதியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலை புதிதாக ஒரு சுண்ணாம்புக்கல் சுரங்கம் தொடங்க இருப்பதாக அறிந்தோம். இதனால் விவசாயம், கால்நடை மற்றும் பொதுமக்களாகிய நாங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. எனவே புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கம் தொடங்க அனுமதி வழங்க கூடாது என்று கூறியிருந்தனர். இடங்கன்னி கிராமத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், தா.பழூர் அருகே உள்ள இடங்கன்னி ஊராட்சியில் உள்ள புதுத்தெருவில் 350 பேர் வசித்து வருகின்றோம். அரசு சார்பில் வழங்கப்பட்ட இந்த குடியிருப்பு பகுதிக்கு மண்சாலை மட்டுமே போடப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் சாலையில் செல்ல அவதிப்படுகின்றனர். எனவே தார்ச்சாலை அல்லது சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் உமாமகேஸ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிசாமி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோழிகளில் கொரோனா வைரஸ் தொற்று என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை
கோழிகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பண்ணையாளர்கள் நேரில் வலியுறுத்தினர்.
2. ஆணாக மாறியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் பாதுகாப்பு கேட்டு மதுரை கோர்ட்டில் மனு
ஆணாக மாறியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் பாதுகாப்பு கேட்டு மதுரை கோர்ட்டில் மனு.
3. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கிணற்றை மீட்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கிணற்றை மீட்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
4. புதுக்கோட்டை நகரில் சுற்றித்திரியும் வனவிலங்குகளுக்கு சரணாலயம் அமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு
புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் புதுக்கோட்டை நகரில் சுற்றித்திரியும் வனவிலங்குகளுக்கு சரணாலயம் அமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
5. புதுச்சத்திரம் அருகே சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
புதுச்சத்திரம் அருகே கல்யாணியில் சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கலெக்டர் மெகராஜிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.