செங்கோட்டை அருகே ரெயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை


செங்கோட்டை அருகே ரெயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 20 Aug 2019 3:45 AM IST (Updated: 20 Aug 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே ரெயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி,

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் மகன் இசக்கிராஜ் (வயது 27). இவர் நேற்று மாலையில் அகரக்கட்டு ரெயில்வே தண்டவாளம் அருகே செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, எதிர்முனையில் பேசியவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விரக்தி அடைந்த இசக்கிராஜ் அந்த வழியாக செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாய்ந்தார்.

இதில் ரெயிலில் சிக்கிய இசக்கிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அந்த பகுதியில் சென்றவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இசக்கிராஜ் செல்போனில் தனது காதலியுடன் பேசியதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் விரக்தி அடைந்த இசக்கிராஜ் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story