துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது


துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2019 4:15 AM IST (Updated: 20 Aug 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கி முனையில் மிரட்டி இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

அம்பர்நாத்,

தானே கல்யாண் பகுதி பா.ஜனதா துணை தலைவராக இருந்தவர் சந்தீப் கோபிநாத் மாலி(வயது41). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது மைனர் பெண்ணிடம் காதலிப்பதாக விருப்பம் தெரிவித்தார். ஆனால் இவரது காதலை மைனர் பெண் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், மைனர் பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி கற்ழித்து உள்ளார். இதுபோல அவர் பலமுறை பலவந்தப்படுத்தி மைனர் பெண்ணை கற்பழித்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த இளம்பெண் மான்பாடா போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா பிரமுகர் சந்தீப் கோவிநாத் மாலி மீது புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தீப் கோபிநாத் மாலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story