எடியூரப்பா, சித்தராமையா ஆட்சியில் நடந்த தொலைபேசி ஒட்டுகேட்பு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் தேவேகவுடா வலியுறுத்தல்
எடியூரப்பா, சித்தராமையா ஆட்சியில் நடந்த தொலைபேசி ஒட்டுகேட்பு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று தேவேகவுடா வலியுறுத்தினார்.
பெங்களூரு,
முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சி தேசிய தலைவருமான தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் தொகுதியில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் நான் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றேன். ஆனால் தொலைபேசி ஒட்டுகேட்பில் சி.பி.ஐ. விசாரணை குறித்து கருத்து தெரிவிக்காமல் வேறு வழியாக காருக்கு சென்றுவிட்டதாக ஊடகங் களில் செய்திகள் வெளியானது. இது தவறானது.
இந்த விவகாரத்தில் கருத்து கூறுவதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் வேறு வழியாக செல்லவில்லை. அவசர பணியாக சென்றேன். நான் எனது அரசியல் வாழ்க்கையில் இதுவரை பயமின்றி போராடி வந்துள்ளேன். ஒரு நபரால் (முதல்-மந்திரி) மட்டும் மந்திரிசபை செயல்பட முடியாது. நிதி மசோதாக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் சட்டசபையில் ஆதரவு வழங்கினோம். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தனி விமானத்தில் மும்பைக்கு பயணம் செய்தபோதும் நான் பேசவில்லை.
கொறடா உத்தரவு பிறப்பிக் கப்பட்டபோதும் நான் எதுவும் பேசவில்லை. ஆயினும் என்னை பற்றி ஊடகங்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு விஷயத்தில் குறை கூறி செய்திகளை வெளியிட்டு வருகின்றன. முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லிக்கு சென்று மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேசிவிட்டு வந்துள்ளார்.
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் உத்தரவுப்படி தான் எடியூரப்பா, தொலைபேசி ஒட்டுகேட்பு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறுவதை நான் ஏற்கமாட்டேன். நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். இத்தகைய விஷயங்கள் மீது பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுக்கமாட்டார். சில அரசியல் நெருக்கடி காரணமாக இந்த முடிவை எடியூரப்பா எடுத்திருக்கலாம்.
தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் குமாரசாமி சிக்கிக் கொண்டுள்ளார் என்று ஊடகங்களில் செய்திகளை வெளியிடுகிறார்கள். இதுகுறித்து மிகைப்படுத்தி செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கூட, தொலைபேசி ஒட்டு கேட்பது தவறு அல்ல என்று கூறியுள்ளது. ராமகிருஷ்ண ஹெக்டே ஆட்சி காலத்தில் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டது. இது குறித்து பத்திரிகைகளில் முழு தகவல்கள் வெளியாயின.
அதுபற்றி நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு ராமகிருஷ்ண ஹெக்டே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தற்போது உள்ள காலக்கட்டத்தில் பெரிய அளவில் தொலைபேசி ஒட்டுகேட்பு நடக்கவில்லை. ஊடகங்கள் தான் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி காட்டுகின்றன. ஆட்சியை நடத்துபவர்களுக்கு உளவுத்துறை அவ்வப்போது தகவல்கள் அளிக்கின்றன.
எடியூரப்பா நடத்திய குதிரை பேர ஆடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் விசாரணை குழு அமைக்கப்படவில்லை. சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் இதுபற்றி கேட்டார். ஆனால் குமாரசாமி அந்த குழுவை அமைக்கவில்லை. அதிகாரிகளின் சண்டை வீதிக்கு வந்து, எங்கே போய் கொண்டிருக்கிறது?. 40 நாட்களுக்குள் ஒரு அதிகாரியை பணி இடமாற்றம் செய்தனர் என்பதற்காக இவ்வளவு விஷயங்கள் நடந்துள்ளது.
எடியூரப்பா முன்பு முதல்-மந்திரியாக இருந்தபோது, பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சியினர் சி.பி.ஐ. விசாரணை கேட்டனர். ஆனால் ஒரு வழக்கில் கூட எடியூரப்பா சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவில்லை. முன்பு எடியூரப்பா ஆட்சி, சித்தராமையா ஆட்சியில் நடந்த தொலைபேசி ஒட்டுகேட்பு குறித்தும் விசாரணை நடைபெறட்டும். கர்நாடகத்தில் முதல் முறையாக தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டது போல் பேசுகிறார்கள். ஆபரேஷன் தாமரை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று சித்தராமையா கூறியிருப்பதையும் நான் கவனித்துள்ளேன்.
வடகர்நாடகம், கடலோர கர்நாடகம் மற்றும் தென் கர்நாடகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடுமையான கஷ்டத்தில் உள்ளனர். மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டு நான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மாநிலத்தின் மக்கள்தொகை, வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் நிவாரண நிதியை மத்திய அரசு அறிவிக்கும்.
எனக்கு சம்பளம் வருவது இல்லை. ஆனாலும் என்னால் இயன்ற தொகையை முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளேன். கட்சி சார்பில் அரிசி, பருப்பு, உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கஷ்டங்களை போக்குவதில் மாநில அரசு உரிய கவனத்தை செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்யமாட்டோம். மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. பொருளாதார வளர்ச்சியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Related Tags :
Next Story