திருப்புவனம் அருகே மணல் சரிந்து பெண் பலி


திருப்புவனம் அருகே மணல் சரிந்து பெண் பலி
x
தினத்தந்தி 21 Aug 2019 3:45 AM IST (Updated: 20 Aug 2019 11:58 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே மணல் சரிந்து விழுந்து பெண் பலியானார்.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே உள்ள பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி அன்னக்கொடி(வயது 38). இவர் நெல்முடிக்கரை மின்வாரிய அலுவலகம் எதிரே வைகை ஆற்றின் பகுதிக்கு நேற்று சென்றார்.

அங்கு அவர் தான் கொண்டு சென்ற சாக்கு மூட்டையில் மணல் அள்ளிக்கொண்டிருந்தார். அப்போது மேல் பகுதியில் இருந்த மணல் திடீரென சரிந்து அவர் மீது விழுந்தது.

இந்த மணலில் சிக்கி கொண்ட அன்னக்கொடியால் அதிலிருந்து மீண்டு வெளியே வரமுடியவில்லை. இதனால் அவர் சிறிதுநேரத்தில் மூச்சுத்திணறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். மணல் அள்ள சென்ற மனைவி நீண்டநேரம் ஆகியும் திரும்பு வராததால் அவரை தேடி ஆறுமுகம் சென்றார். அப்போது மணல் சரிந்து விழுந்து அன்னக்கொடி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருப்புனம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story