அனுமதியுடன் வண்டல் மண் அள்ளிய டிராக்டர்களை விடுவிக்கக்கோரி காங்கிரசார் மனு
திண்டுக்கல் மாகாளி குளத்தில் அனுமதியுடன் வண்டல் மண் அள்ளிய டிராக்டர்களை விடுவிக்கக்கோரி காங்கிரசார் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்கனிராஜா தலைமையில் அந்த கட்சியினர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் திண்டுக்கல் கிழக்கு தாலுகா கணவாய்பட்டியை சேர்ந்தவர் ராஜ்கபூர். இவர் மாகாளி குளத்தில் இருந்து விவசாய நிலத்துக்கு தேவையான வண்டல்மண் அள்ள தாசில்தாரிடம் அனுமதி கடிதம் பெற்றுள்ளார். அதன்மூலம் வண்டல் மண் அள்ளிய போது,
கனிமவளத்துறை அதிகாரிகள் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்துள்ளனர். தற்போது அந்த டிராக்டர்கள், சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் வண்டல் மண்ணுடன் நிற்கிறது. அனுமதி கடிதம் பெற்று வண்டல் மண் அள்ளி இருப்பதால், டிராக்டர்களை விடுவிக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story