ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர், சின்னக்காம்பட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர், சின்னக்காம்பட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Aug 2019 3:15 AM IST (Updated: 21 Aug 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர், சின்னக்காம்பட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கன்னிவாடி,

ரெட்டியார்சத்திரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, ரெட்டியார்சத்திரம், மாங்கணஅம்மாபட்டி, சில்வார்பட்டி, கே.புதுக்கோட்டை, சுக்காம்பட்டி, மூலச்சத்திரம், புளியராஜாக்கப்பட்டி, அணைப்பட்டி, கதிரையன்குளம், முத்தனம்பட்டி, வெயில் அடிச்சான்பட்டி, பங்காருபுரம், தாதன்கோட்டை, எல்லப்பட்டி, ஸ்ரீராமபுரம், அரசமரத்துப்பட்டி, நீலமலைக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அன்றையதினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை ரெட்டியார்சத்திரம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜன் தெரிவித்தார்.

வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. இதையொட்டி வேடசந்தூர், நாககோனானூர், வெள்ளனம்பட்டி, காளனம்பட்டி, நத்தப்பட்டி, தட்டாரபட்டி, சுள்ளெறும்பு, நவாலூத்து, அம்மாபட்டி, பூவாய்பாளையம், பூத்தாம்பட்டி, குருநாதநாயக்கனூர், அம்மாபட்டி, மாரம்பாடி, முருநெல்லிக்கோட்டை, சேனண்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வேடசந்தூர் உதவி செயற்பொறியாளர் வீ.கருப்பையா தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லை அடுத்த சின்னக்காம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. இதையொட்டி சின்னக்காம்பட்டி, இடையகோட்டை, குத்திலிப்பை, ஐ.வாடிப்பட்டி, கொங்கபட்டி, அண்ணாநகர், இ.அய்யம்பாளையம், மாம்பாறை, எல்லப்பட்டி, இடையன்வலசு, இ.கல்லுபட்டி, வலையபட்டி, மார்க்கம்பட்டி, கொ.கீரனூர், சாமியாடிபுதூர், நரசிங்கபுரம், ஜவ்வாதுபட்டி, புல்லாக்கவுண்டனூர், சோழியப்பகவுண்டனூர், நாரப்பநாயக்கன்பட்டி, அத்தப்பன்பட்டி, பாறைபட்டி, பெருமாள்கவுண்டன்வலசு, கக்கரநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை ஒட்டன்சத்திரம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

Next Story