ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலைமாடசாமி கோவில் கொடை விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலைமாடசாமி கோவில் கொடை விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 21 Aug 2019 3:30 AM IST (Updated: 21 Aug 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலைமாடசாமி கோவிலில் கொடை விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏரல், 

ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலைமாடசாமி கோவிலில் கொடை விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொடை விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலைமாடசாமி, பேச்சியம்மன் கோவிலில் கொடை விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

பின்னர் மதியக்கொடை நடந்தது. இரவில் சாமக்கொடை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். பின்னர் பூக்குழி திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் கோவிலுக்கு வந்தனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

சிறப்பு பஸ்கள்

நெல்லை, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆறுமுகமங்கலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Next Story