சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது
காரைக்கால் அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்,
காரைக்காலை அடுத்த நிரவி கொம்யூன் விழிதியூர் சங்கரன் தோப்பைச் சேர்ந்தவர் பாலையா. இவரது மகன் பாலசந்தர் (வயது21). கூலி தொழிலாளி. இவர் 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார். அவரிடம் திருமண ஆசைவார்த்தை கூறி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கடத்திச் சென்றார். அங்கு வைத்து, சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியை காணாமல் அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் நிரவி போலீசார் விசாரித்தனர். இதில் பாலசந்தர் சிறுமியை திருவாரூர் மாவட்டத்திற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், நிரவி போலீசார் திருவாரூர் சென்று, இருவரையும் காரைக்கால் கொண்டுவந்தனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில், பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, பாலசந்தரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story