பெரியகுளத்துப்பாளையம் குகை வழிப்பாதை அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வரும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


பெரியகுளத்துப்பாளையம் குகை வழிப்பாதை அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வரும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 20 Aug 2019 11:15 PM GMT (Updated: 20 Aug 2019 8:15 PM GMT)

கரூர் அருகே பெரிய குளத்துப்பாளையத்தில் அமைக்கப்பட்டு வரும் குகை வழிப்பாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் அடுத்தவாரம் பயன்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர்,

கரூர் நகராட்சிக்குட்பட்ட பெரிய குளத்துப்பாளையம் முதல் சேலம் புறவழிச்சாலை வரை 1,400 மீட்டர் நீளத்திற்கு ரூ.1½ கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருவதையும், பெரியகுளத்துப்பாளையத்தில் ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் குகைவழிப்பாதை பணிகள், காந்திகிராமம் பகுதிக்குட்பட்ட மாரியம்மன் கோவில் முதல் திருச்சி சாலை அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் அன்பழகனுடன் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

பின்னர் அமைச்சர், அந்த பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, நகர செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

குகைவழிப்பாதை

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கரூர் நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் வடிகால் என்பது பெரும் பிரச்சினையாக இருந்து வந்தது. மழைக்காலங்களில் வருகின்ற நீரானது வீடுகளுக்குள் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலை இருந்தது. கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதன் முக்கியத்துவத்தை முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறிய உடன், அந்த பணிக்காக ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பெரியகுளத்துப்பாளையம் குகைவழிப்பாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த வாரத்தில் இந்த பாதை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படும். கரூர் அமராவதி ஆற்றில் 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு படிப்படியாக தான் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது கரூர் நகருக்குள் தண்ணீர் வந்து விட்டது. பொதுமக்கள், விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில், விரைவில் அந்த தண்ணீர் கரூரின் கடைமடை பகுதி வரை சென்று சேரும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story