அமராவதி ஆற்று தண்ணீர் செட்டிப்பாளையம் அணையை வந்தடைந்தது
கரூர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் செட்டிப்பாளையம் அணையை வந்தடைந்தது.
கரூர்,
கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களை வளப்படுத்தும் காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் அமராவதியும் ஒன்றாகும். பழனிமலைத்தொடருக்கும், ஆனைமலைத்தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகும் இந்த ஆறு திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை வழியாக கரூர் நகருக்குள் பாய்ந்து திருமுக்கூடலூரில் காவிரியாற்றில் கலக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அமராவதி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, 90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டுகிறபோது தான் உபரிநீர் கரூர் அமராவதி ஆற்றில் திறக்கப்படுகிறது. அரசு உத்தரவின்பேரில் பாசனத்திற்கும் நீர் திறக்கப்படுகிறது. எனினும் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக கரூர் அமராவதி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் கடும் வறட்சி நிலவியது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததால் உடுமலைபேட்டை அமராவதி அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. அப்போது அங்குள்ள ஆயக்கட்டு பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. இந்த வேளையில் கரூர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் அதனை தீர்க்கும் பொருட்டும், விவசாய பணிகளுக்கு உதவிகரமாக இருக்கும் பொருட்டும் கரூர் அமராவதி ஆற்றில் கடைமடை பகுதி வரை நீர் திறந்து விட வழிவகை செய்ய திருப்பூர், கரூர் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் கடந்த 14-ந்தேதி மாலையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி வீதம் கரூர் அமராவதி ஆற்றில் தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீரானது கடந்த 17-ந்தேதி இரவு 10 மணியளவில் கரூர் மாவட்ட எல்லையான சின்னதாராபுரம் அருகே உள்ள கோடந்தூர் ஊராட்சி வடகரை அமராவதி ஆற்றை வந்தடைந்தது. இதற்கிடையே தண்ணீர் திறப்பு 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டதால் கரூர் கடைமடை வரை தண்ணீர் வருமா? என கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் கரூர் செட்டிப்பாளையம் அணைக்கு தண்ணீர் வந்தது. அங்கு நீர் தேங்கிய பிறகு, அணையிலுள்ள 5 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு செட்டிபாளையம் அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டு, உபரிநீர் ஆற்றில் விடப்படுவதால், செட்டிபாளையம், அப்பிபாளையம், சுக்காலியூர், செல்லாண்டி பாளையம், சணபிரட்டி, மேலபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் கரூர் நகரில் திருமாநிலையூர், பசுபதிபாளையம் உள்ளிட்ட இடங்களில் அமராவதி ஆற்றில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. ஆற்றில் கழிவுநீர் திறந்து விடுபவர்கள் மீதும், ஆற்றில் தண்ணீர் வருவதால் சாயக்கழிவினை யாரும் விடுகின்றனரா? எனவும் மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து முன்எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும், அமராவதி அணையின் நீர்மட்டம் 70 அடியாக உள்ளது. ஆனால் 500 கனஅடி வீதம் தான் கரூர் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே தண்ணீர் திறப்பினை அதிகரித்து கரூர் கடைமடை வரை தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story