பணி நிரந்தரம் கோரி ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பணி நிரந்தரம் கோரி ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Aug 2019 10:45 PM GMT (Updated: 20 Aug 2019 8:31 PM GMT)

தமிழ்நாடு அரசு ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி,

தமிழ்நாடு அரசு ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொருளாளர் அருள்மணி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கோரிக்கைககளை விளக்கி தொழிற்சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் பரமசிவம், அரசு பணியாளர் சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் அறவாழி, மாநில நிர்வாகிகள் முருகானந்தம், கவியரசன், அண்ணாதுரை மற்றும் இளஞ்செழியன், முருகானந்தம், கரிகாலன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள் ‘டாஸ்மாக்’ பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அதிரடி ஆய்வு என்ற பெயரில் கடை பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதை கைவிடவேண்டும், அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் சட்ட விரோத ‘பார்’களை மூடவேண்டும், இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், பணியில் இருந்து ஓய்வு பெற்றோருக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் சித்திரவேலு நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவாரூர் உள்பட 8 மாவட்டங்களை சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story