சேலத்தில் மதுவிற்ற 4 பேர் கைது 281 பாட்டில்கள் பறிமுதல்


சேலத்தில் மதுவிற்ற 4 பேர் கைது 281 பாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Aug 2019 4:00 AM IST (Updated: 21 Aug 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக விற்ற மதுபாட்டில்கள் பறிமுதல்; 4 பேரை போலிசாரால் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையொட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் ஆனந்தா பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் மதுபாட்டிலை பதுக்கி விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 42) என்பதும், அவர் மதுவிற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சேலம் அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் நாச்சம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த அம்மாபேட்டையை சேர்ந்த பாஷா (44) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதே போன்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் பி.நாட்டாமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த ராதாகிருஷ்ணன் (48), பாலகிருஷ்ணன் (48) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 41 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 281 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

Next Story