வானவில் : ஹெச்.பி.யின் ‘குரோம்புக் பி.சி.’
அமெரிக்காவில் இளம் தலைமுறையினர் இப்போது அதிக அளவில் மைக்ரோபுக் இயங்குதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹியூலெட் பக்கார்ட் நிறுவனம் (ஹெச்.பி.) இந்தியாவில் முதல் முறையாக குரோம்புக் இயங்குதளத்தைக் கொண்ட (ஓ.எஸ்.) லேப் டாப் ஹெச்.பி. குரோம்புக் எக்ஸ் 360 என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது.
பெரும்பாலும் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் உலகில் குரோம்புக் இயங்குதளத்தை உபயோகிப்போர் எண்ணிக்கை ஒரு சதவீதம் மட்டுமே.
அமெரிக்காவில் இளம் தலைமுறையினர் இப்போது அதிக அளவில் மைக்ரோபுக் இயங்குதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் மைக்ரோபுக் இயங்குதளத்தை உபயோகிப்போர் எண்ணிக்கைக் குறைவாக உள்ள நிலையிலும் மிகவும் துணிந்து ஹெச்.பி. நிறுவனம் இத்தகைய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
14 அங்குல திரையைக் கொண்ட இந்த கூகுள் குரோம்புக் லேப்டாப் 8-வது தலைமுறை கோர் பிராசஸரைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.44,990 ஆகும். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் தனது இயங்குதளத்தைக் கொண்ட லேப்டாப், டேப்லெட்களை அறிமுகம் செய்தது. அதன்பிறகு இது குறித்து அந்நிறுவனம் போதிய கவனம் செலுத்தவில்லை.
இப்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளம்தான் உள்ளது. அத்தகைய எளிமையான இயங்குதளத்தை உபயோகப்படுத்துபவர்களுக்கு குரோம்புக் இயங்குதளத்திலான கம்ப்யூட்டரை இயங்குவது மிக மிக எளிதாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்ட இத்தகைய கம்ப்யூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் குரோம்புக் இயங்குதளம் கொண்ட கம்ப்யூட்டர்கள் எளிதில் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் இணைப்பைப் பெற முடியும். இதன் மூலம் அதில் கிடைக்கும் அனைத்து செயலிகளையும் லேப்டாப்பில் தங்களது பர்சனல் கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியும். இந்த லேப்டாப்பை டேப்லெட் போல பயன்படுத்த முடியும்.
இதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் தொடுதிரை. பொதுவாக டேப்லெட், பி.சி. உள்ளிட்டவை பிளாஸ்டிக்கால் ஆனவை. ஆனால் இந்த லேப்டாப் அலுமினியம் மேற்பகுதியைக் கொண்டுள்ளது. தொழில்துறையினருக்கு இது மிகவும் ஏற்றது.
Related Tags :
Next Story