சங்கராபுரம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்; அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
காரைக்குடி சங்கராபுரம் பகுதியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
காரைக்குடி,
காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சியில் பொது சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். அமைச்சர் பாஸ்கரன் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து தூய்மை பணிக்கான உபகரணங்கள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரம் உயர்த்தியும், கர்ப்பிணிகளுக்கு தாய்-சேய் நல பெட்டகம் மற்றும் அம்மா பரிசு பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகள் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பணியில் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தங்கள் பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். இதேபோல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நிலவேம்பு கசாயம் குடித்தால் காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து விடுபடலாம். நீர் தேக்க தொட்டிகளில் சரியான காலக்கட்டங்களில் குளோரினேசன் செய்யப்பட்டு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறதா என்பதை துப்புரவு பணியாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் சங்கராபுரம் ஊராட்சியை தூய்மைப்படுத்தும் விதமாக ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் 10 குப்பை வண்டிகள், 12 வட்டார துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புகை மருந்து தெளிப்பு எந்திரம் ஆகியவற்ற்ை- அமைச்சர் வழங்கினார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். சங்கராபுரம் தந்தை பெரியார் நகர் 2-வது வீதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் நீண்டநாட்களாக தேங்கியிருந்த கழிவுநீர் கால்வாயை பார்வையிட்டு உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கால்வாய் உடனடியாக சீரமைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சுகாதார பணிகளின் துணை இயக்குனர் யசோதாமணி, உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) விஜயநாதன், பூச்சியியல் அலுவலர் ரமேஷ், உதவி திட்ட மேலாளர் அரவிந்த் ஆதவன், புதுவயல் வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தராஜ், சுகாதார ஆய்வாளர் சுரேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் அசோகன், பாம்கோ கூட்டுறவு சங்கத் தலைவர் நாகராஜன், துணைத்தலைவர் மெய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story