திருவெறும்பூர் அருகே கந்துவட்டி கொடுமையால் சலூன் கடைக்காரர் தீக்குளிப்பு மிரட்டல் விடுத்தவர் கைது
திருவெறும்பூர் அருகே கந்து வட்டி கொடுமையால் சலூன்கடைக்காரர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரிடம் வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி,
தமிழகத்தில் ஒரு சிலர் நிதி நிறுவனம் என்ற பெயரில் கந்துவட்டி, மீட்டர் வட்டி என்பன போன்ற பல்வேறு பெயர்களில் வியாபாரிகளுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வருகிறார்கள். தொழில் விருத்திக்காக சிலர் இவர்களிடம் பணம் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்கள்.
அந்தவகையில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த சலூன் கடை நடத்திவரும் முருகேசன் (வயது 40) என்பவர் தொழிலை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக நவல்பட்டு மற்றும் துவாக்குடி பகுதிகளை சேர்ந்த சிலரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கினார். ஆனால், வாங்கிய பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால், வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு முருகேசனுக்கு நெருக்கடி கொடுத்து உள்ளனர்.
தீக்குளித்தார்
துவாக்குடி தெற்கு மலையை சேர்ந்த சுரேஷ் என்பவரும் முருகேசனுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்திருந்தார். அவர் நேற்று காலை முருகேசனிடம் வட்டிக்கு கொடுத்த பணத்தை திரும்பகேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. கந்துவட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்ப கேட்டு மிரட்டியதால் மனமுடைந்த முருகேசன் கடையில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொண்டார். இதில் அவரது உடல் தீப்பற்றி எரிய தொடங்கியது.
உடனே, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து முருகேசன் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
இதுகுறித்த புகாரின்பேரில், நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 16-ந் தேதி பூலாங்குடியை சேர்ந்த தையல் தொழிலாளி ஒருவர், கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு 4 நாட்களே ஆன நிலையில் சலூன் கடை உரிமையாளர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story