பெண்கள் தங்கள் திறமைகளை கண்டுபிடித்து கூர்மைப்படுத்த வேண்டும்; வேளாளர் மகளிர் கல்லூரி பொன்விழாவில் ஜி.கே.வாசன் பேச்சு
பெண்கள் தங்கள் திறமைகளை கண்டுபிடித்து கூர்மைப்படுத்த வேண்டும் என்று வேளாளர் மகளிர் கல்லூரி பொன்விழாவில் ஜி.கே.வாசன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரி பொன்விழா தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விழாவில் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டார். அதை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கல்விக்கண் திறந்த தலைவராக போற்றப்படுபவர் காமராஜர். கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் கட்டினார். ஏழைக்குழந்தைகளும் கல்வி பயில மதிய உணவுத்திட்டம், ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சீருடை ஆகியவற்றை கொடுத்தவர் காமராஜர். அவருக்கு பின்னர் பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா.
முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அன்னை தெரசா, கல்பனா சாவ்லா, கர்ணம் மல்லேஸ்வரி உள்ளிட்ட பெண்களை முன்மாதிரியாக கொண்டு மாணவிகள் செயல்பட வேண்டும். இந்தியாவில் மிக உயர்ந்த 150 தனியார் நிறுவனங்களில் 12 சதவீதம் அதாவது 30 பெண்கள் மிகப்பெரிய உயரிய பதவிகளில் இருக்கிறார்கள். பெண்களுக்குள் ஆற்றல், திறமை, ஒழிந்து உள்ளது.
அதனை பெண்கள் கண்டறிந்து தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். முயன்றால் முடியாதது இல்லை. பெண்கள் தங்கள் ஆற்றலை கண்டறிந்து அதை கூர்மையாக்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது பெண்களின் முன்னேற்றத்தையும் சேர்ந்ததே. நாடு வளர்ச்சி அடைய பெண்கள் மேம்பாடு அடைய வேண்டும். பொன் விழா கண்ட இந்த கல்லூரி, நூற்றாண்டு விழா காண வாழ்த்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

Related Tags :
Next Story