புயலால் சேதமடைந்த கோட்டூர், தீயணைப்பு நிலையம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
புயலால் சேதமடைந்த கோட்டூர், தீயணைப்பு நிலையம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோட்டூர்,
கோட்டூரில் தீயணைப்பு நிலையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் 13-12-1996-ம் ஆண்டு முதல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த சிறிய கட்டிடத்தில் ஒரு பக்கம் அலுவலகமும், மறுபக்கம் 17 வீரர்கள் உடமைகளுடன் தங்கும் அறையும், பக்கத்தில் வாகனம் நிறுத்தும் இடமும் உள்ளது.
இந்த கட்டிடத்தின் கூரை கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் முற்றிலும் சேதமானது. அலுவலகம் மற்றும் வீரர்கள் தங்கும் அறைகளின் மேல் கூரைகள் மட்டும் தார்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்தும் இடம் கூரை இல்லாமல் உள்ளது. மேலும் மழை பெய்யும்போது கட்டிடத்தின் உள்ளே தண்ணீர் செல்வதால் தங்கும் இடம் முழுவதும் ஈரமாகி விடுகிறது. இதனால் வீரர்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள்.
நடவடிக்கை
தீயணைப்பு வாகனம் மழையில் நனையும் சூழ்நிலை நிலவுகிறது. மேலும் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு குறுகிய சாலையில் சென்று தான் மெயின் சாலையை தீயணைப்பு வாகனம் அடைய வேண்டி உள்ளது. இதனால் அவசர தேவைக்கு விரைவாக செல்ல முடியவில்லை. இந்த தீயணைப்பு நிலையத்தின் மிக அருகில் நூற்றாண்டு கண்ட சேதமடைந்த வேளாண்மை துறை கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் தீயணைப்பு நிலையம் மீது இடிந்து விழக்கூடிய அபாயநிலை நிலவுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீயணைப்பு நிலையத்தை பார்வையிட்டு எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கும் இந்த தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Tags :
Next Story