திருவையாறு அருகே, குளத்தை தூர்வாரியபோது 3 சாமி சிலைகள் கண்டெடுப்பு


திருவையாறு அருகே, குளத்தை தூர்வாரியபோது 3 சாமி சிலைகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 22 Aug 2019 4:30 AM IST (Updated: 22 Aug 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே குளத்தை தூர்வாரியபோது 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

திருவையாறு,

திருவையாறு அருகே பெரும்புலியூர் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தை தூர்வாரும் பணி ரூ.1 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. நேற்று குளத்தை பொக்லின் எந்திரம் மூலமாக தூர்வாரி கொண்டிருந்த போது அங்கு 3 கற்சிலைகள் மண்ணில் புதைந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் சிலைகள் இருந்த பகுதியை கவனமாக தோண்டி சிலைகளை வெளியே எடுத்தனர். இதில் அந்த சிலைகள் முருகன், கால பைரவர் மற்றும் ஒரு சித்தரின் சிலை என்பது தெரியவந்தது. முருகன் சிலை 3½ அடி உயரம் இருந்தது.

எந்த காலத்தை சேர்ந்தவை?

கால பைரவர் சிலை 2½ அடி உயரம் இருந்தது. சித்தர் சிலை பாதி உடைந்த நிலையில் காட்சி அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் விஜயராமன், கிராம நிர்வாக அதிகாரி மகேஸ்வரி, கிராம உதவியாளர் சசிகலா ஆகியோர் அங்கு சென்று சாமி சிலைகளை கைப்பற்றி திருவையாறு தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தவை? எந்த கோவிலுக்கு சொந்த மானவை? யாராவது கடத்தி வந்து குளத்தில் வீசினார்களா? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story