வெள்ளப்பெருக்கு குறைந்தது: குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


வெள்ளப்பெருக்கு குறைந்தது: குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 21 Aug 2019 10:00 PM GMT (Updated: 21 Aug 2019 8:31 PM GMT)

குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி, 

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மாலையில் ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்ற அருவிகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் அங்கு குளிப்பதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். அதனை தொடர்ந்து ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அருவிகளிலும் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஆனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சுமாராகவே இருந்தது. இதனால் கூட்ட நெரிசல் இன்றி அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

Next Story