பள்ளிபாளையம் அருகே ரூ.27 லட்சத்தில் தார்சாலை பணி-அமைச்சர் தொடங்கி வைத்தார்


பள்ளிபாளையம் அருகே ரூ.27 லட்சத்தில் தார்சாலை பணி-அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Aug 2019 4:30 AM IST (Updated: 22 Aug 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே, ரூ.27 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணியை அமைச்சர் தங்கமணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பள்ளிபாளையம், 

பள்ளிபாளையம் ஒன்றியம் ஆனங்கூர் நெட்டவேலாம்பாளையத்தில் ரூ.27 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு, நெட்டவேலாம்பாளையத்தில் இருந்து கருப்பண்ணார் கோவில் வழியாக தார்சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் முன்னாள் ஒன்றிய தலைவர் செந்தில், திருச்செங்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் திருமூர்த்தி, ஆனங்கூர் கூட்டுறவு சங்கத்தலைவர் சிங்காரவேலு மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ்., காவிரி கரையில் நுழைவு பாலம் கட்டும் பணி ரூ.22 கோடியில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை அமைச்சர் தங்கமணி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் பொறியாளர்களிடம் பணி விவரம் குறித்து கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் நகராட்சி முன்னாள் தலைவர் வெள்ளிங்கிரி, முன்னாள் துணை தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கட்சியினர், அதிகாரிகள் உடன் சென்றனர்.

திருச்்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளி காலனி அறிஞர் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.22 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சைக்கிள் நிறுத்தும் இடம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சிகளுக்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி முன்னிலை வகித்தார். இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு வகுப்பறை கட்டிடங்களையும், புதியதாக அமைக்கப்பட்டுள்ள சைக்கிள் நிறுத்தும் இடத்தையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் அரசுத்துறை அலுவலர்கள், கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story