ராஜ் தாக்கரேக்கு அனுப்பிய சம்மனால் எதுவும் வெளிவரப்போவதில்லை உத்தவ் தாக்கரே கருத்து
ராஜ்தாக்கரேக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனால் எதுவும் வெளிவரப்போவதில்லை என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை,
ராஜ்தாக்கரேக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனால் எதுவும் வெளிவரப்போவதில்லை என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
உத்தவ் தாக்கரே ஆதரவு
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அவர் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இந்தநிலையில் ராஜ் தாக்கரேக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசி உள்ளார்.
இது குறித்து மும்பை பாந்திராவில் உள்ள அவரது இல்லமான ‘மாதோஸ்ரீ‘யில் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்த உத்தவ் தாக்கரே, “இந்த விசாரணையின் மூலம் எதுவும் வெளிவரப்போவதில்லை. இருந்தாலும், அதற்காக 2 நாட்கள் பொறுமையாக இருப்பதில் எந்த தவறும் இல்லை” என்றார்.
பரபரப்பு
ஒன்றுவிட்ட சகோதரர்களான உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே அரசியலில் பரம எதிரிகளாக உள்ளனர். எனினும் அரிதிலும், அரிதாக குடும்ப நிகழ்ச்சிகளில் மட்டும் ஒன்றாக கலந்து கொள்கின்றனர்.
இந்தநிலையில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரேவுக்கு ஆதரவாக கருத்து கூறியிருப்பது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story