குடும்பத் தகராறில், செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி
மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் விரக்தி அடைந்த வாலிபர், மாமனார்- மாமியார் உள்பட 4 பேர் மீது குற்றம்சாட்டி செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்போது அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், வி.வி. கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்பாஸ்(வயது 33). இவருடைய மனைவி அல்மாஸ்பேகம்(27). இவர்களுக்கு 2015-ம் ஆண்டு திருமணம் ஆனது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து அல்மாஸ்பேகம் தனது தந்தை மற்றும் தம்பியிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், முகமது அப்பாசை அடித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தனது கணவர் முகமது அப்பாஸ், தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக நேற்று முன்தினம் வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அல்மாஸ்பேகம் புகார் அளித்தார்.
இதனால் மனம் உடைந்த முகமது அப்பாஸ், தனது வீட்டில் இருந்த பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனடியாக அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் முகமது அப்பாசின் செல்போனை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் அவர், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருந்தார்.
அதில் அவர், “இதன் மூலம் போலீசாருக்கு புகார் கொடுக்கிறேன். நான் சாகப்போகிறேன். இதற்கு காரணம் யார்? என்றால் எனது மாமனார், மாமியார், மச்சான் மற்றும் அவருடைய மனைவி ஆகிய 4 பேர் தான் காரணம். நான் வேண்டாம் என்று என் வாழ்க்கையை வீணடித்து விட்டார்கள். நான் சாப்பாடு போடவில்லை என்று கூறுகிறார்கள். 50 பவுன் நகை கேட்டு தொந்தரவு செய்கிறேன் என்று கூறுகிறார்கள். எல்லாம் அல்லாவுக்கு தெரியும். நான் சாகப்போகிறேன். அதற்கு காரணம் இவர்கள் 4 பேர்தான். இதுதான் என்னுடைய வாக்குமூலம்” என்று பேசி இருந்தார்.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story