திருச்சி, திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கம் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது


திருச்சி, திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கம் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 22 Aug 2019 10:45 PM GMT (Updated: 22 Aug 2019 5:28 PM GMT)

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி தெற்கு ரெயில்வே சிறப்பு கட்டண ரெயில்களை இயக்குகிறது. அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

திருச்சி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி திருச்சி, திருவனந்தபுரம், எர்ணாகுளம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு கட்டண ரெயில்களை தெற்கு ரெயில்வே நிர்வாகம் இயக்குகிறது. அதன்படி வருகிற 28-ந் தேதி(புதன்கிழமை) மற்றும் செப்டம்பர் 4-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்(வண்டி எண்:06085) இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 10.05 மணிக்கு வேளாங்கண்ணியை அடைகிறது.

இதுபோல வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வருகிற 29-ந் தேதி மற்றும் செப்டம்பர் 5-ந் தேதி சிறப்பு ரெயில்(வண்டி எண்:06086) திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் மதியம் 1.15 மணிக்கு திருவனந்தபுரத்தை அடைகிறது. இந்த ரெயில்கள் குளித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங் களில் நின்று செல்லும்.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு செப்டம்பர் 8-ந் தேதி சிறப்பு ரெயில்(வண்டி எண்:06089) இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் ரெயில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக மாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணியை அடைகிறது.

இதுபோல எர்ணா குளத்தில் இருந்து வேளாங் கண்ணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்:06079) வருகிற 29-ந் தேதி மற்றும் செப்டம்பர் 5-ந் தேதியும், மறுமார்க்கமான வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரெயில்(வண்டி எண்:06080) வருகிற 30-ந் தேதி, செப்டம்பர் 5-ந் தேதி அன்றும் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இரவு 11.25 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் 12.25 மணிக்கு வேளாங்கண்ணியை அடைகிறது. வேளாங்கண்ணியில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு எர்ணாகுளத்தை அடைகிறது. இந்த ரெயில் அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, கருர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ராமேசுவரத்தில் இருந்து ஐதராபாத்திற்கு சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்:07686) வருகிற 25-ந் தேதி மற்றும் செப்டம்பர் மாதம் 1, 8, 15, 22 மற்றும் 29-ந் தேதிகளிலும், அக்டோபர் மாதம் 6, 13, 20 மற்றும் 27-ந் தேதிகளிலும் இயக்கப்படுகிறது. ராமேசுவரத்தில் அதிகாலை 5 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 11 மணிக்கு ஐதராபாத்தை அடைகிறது.

இந்த ரெயில் மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி, ரேணிகுண்டா, குதூர், நெல்லூர், ஓங்கேல், குண்டூர், மிர்யலகுடா, நால்கொண்டா மற்றும் செகந்திராபாத் ஆகிய ரெயில் நிலையங் களில் நின்று செல்லும்.

மேற்கண்ட சிறப்பு கட்டண ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story