திருவாரூர் அருகே நடந்தது: விழுந்து, எழுந்து செல்லும் வினோத தேர் திருவிழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்


திருவாரூர் அருகே நடந்தது: விழுந்து, எழுந்து செல்லும் வினோத தேர் திருவிழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 23 Aug 2019 4:00 AM IST (Updated: 23 Aug 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே விழுந்து, எழுந்து செல்லும் வினோத தேர் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள தம்பளாம்புலியூர் கிராமத்தில் உள்ள பழமையான எழுந்தாளம்மன் என அழைக்கப்படும் பிடாரி குளுந்தாளம்மன்் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாதம் தேரோட்ட விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேரோட்ட விழா நேற்று நடந்தது. இதனையொட்டி பிடாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 20 அடி உயரம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்யப்பட்டது.

பின்னர் பிடாரியம்மன் தேரோட்ட விழா தொடங்கி கிராமங்களில் வலம் வர தொடங்கியது. இந்த தேர் சக்கரத்தில் ஓடுவதிற்கு மாறாக கிராம மக்கள் தோளில் தேரை தூக்கிக்கொண்டு ஆடிய வண்ணம் செல்வார்கள்.

விழுந்து, எழுந்து செல்வார்கள்

அப்போது தேரின் பாரம் தாங்காமல் தேர் பக்கவாட்டில் சாய்ந்து விழும் என நம்பப்பட்டு வருகிறது. அப்போது தேரோடு அம்மனும், பூசாரியும் சேர்ந்து விழுவார்கள். இப்படி விழுந்து, விழுந்து, எழுந்து செல்லும் தேர் என்பதால் இந்த பிடாரியம்மனுக்கு விழுந்து, எழுந்தாளம்மன் என்ற பெயர் வந்தது.

இப்படி கிராமத்தில் தெருவில் பிடாரியம்மன் தேர் வரும்போது யார் வீட்டு வாசலில் தேர் அம்மனுடன் கவிழ்ந்்து விழுகிறதோ அந்த வீட்டில் செல்வங்கள் பெருகும் எனவும், இதேபோல் தேர் வயலில் இறங்கி ஓடும்போது யாருடைய வயலில் விழுந்து எழுகிறதோ அந்த வயலில் அந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும் என கிராம மக்கள் நம்புகின்றனர்.

ஏராளமான பக்தர்கள்

விழுந்து, எழுந்து செல்லும்் வினோத தேரோட்ட விழாவை திருவாரூர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

Next Story