திருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சமையல்காரர் பலி
திருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சமையல்காரர் பலியானார்.
திருத்துறைப்பூண்டி,
நாகை மாவட்டம் உம்பளச்சேரியை சேர்ந்தவர் பாலசண்முகம்( வயது70) .இவருக்கு குருராமலிங்கம், சிவமணி என இரண்டு மகன்களும், கீதா என்ற மகளும் உள்ளனர். திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சாய்பாபா கோவிலில் சமையல்காரராக பாலசண்முகம் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு பணிகளை முடித்துவிட்டு வேலூரில் உள்ள தனது மகள் கீதா வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து பாமணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பாலசண்முகம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
போலீசார் விசாரணை
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தெற்கு பாமணியை சேர்ந்த செல்வராஜ் மகன் சரண்ராஜ்(25) படுகாயமடைந்தார். இவர் திருத்துறைப்பூண்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story