மாவட்ட செய்திகள்

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் + "||" + Protest against the arrest of P. Chidambaram

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் ஜான்அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. போலீசார் கைது செய்ததை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக ப.சிதம்பரத்தை விடுதலை செய்யக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் மாநில பொதுக் குழு உறுப்பினர் தங்கவேல், மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி, பொதுச் செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுவழி கோரி ஓட்டல்களை அடைத்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கீரமங்கலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய கோரி ஓட்டல் உரிமையாளர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அமித்‌ஷா, ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் திடீர் மறியல்; போலீசாருடன் கடும் வாக்குவாதம்
அமித்‌ஷா, ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 21 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
3. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. நாகர்கோவிலில் அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்த்தாண்டத்தில் அமைச்சரின் உருவப்படம் எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. ரெட்டியார்சத்திரம், வடமதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ரெட்டியார்சத்திரம், வடமதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.