ஊத்தங்கரை பகுதியில் ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
ஊத்தங்கரை பகுதியில் ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லாவி,
ஊத்தங்கரை தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சின்னப்பனேரி உள்ளது. இந்த சின்னப்பனேரி தண்ணீரால் கெங்கபிராம்பட்டி, உப்பாரப்பட்டி, வெங்கடதாம்பட்டி ஆகிய ஊராட்சிகளிலுள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து அங்குள்ள ஆழ்துளை கிணறு, திறந்த வெளி கிணறு, குளம், குட்டை போன்றவற்றில் எப்போதும் தண்ணீர் நிரம்பி இருக்கும். தற்போது இந்த ஏரியை சிலர் ஆக்கிரமித்து வீடுகள், கட்டிடங்கள் மற்றும் விவசாய நிலங்களமாக மாற்றி விட்டனர் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
அதேபோல, ஊத்தங்கரை பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள சுமார் 32 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியும் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தண்ணீர் வரத்து உள்ள பகுதிகள் அனைத்திலும் வீடுகளும், கடைகளும், அதிகரித்து காணப்படுவதால் தற்போது இந்த பெரிய ஏரி நீர்வரத்து இன்றி குட்டை போல காட்சியளிக்கிறது.
மேலும், பேரூராட்சியில் உள்ள பீக்குட்டை ஏரி, கலைஞர் நகரிலுள்ள தாசில்தார் குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளிலும் ஆக்கிரமிப்்புகள் அதிகரித்து உள்ளதால் ஊத்தங்கரை பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, ஊத்தங்கரை பேரூராட்சி பகுதியில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றியும், ஏரிகளை அகலப்படுத்தியும், தண்ணீர் வரும் கால்வாய்களை தூர்வாரிடவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story