இளம்பிள்ளைக்கு வந்த அரசு பஸ்சுக்கு வரவேற்பு அளித்த பொதுமக்கள்
ஓமலூரில் இருந்து இளம்பிள்ளைக்கு வந்த அரசு பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்; பொதுமக்கள் வரவேற்புஅளித்தனர்.
இளம்பிள்ளை,
சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ஓமலூரில் இருந்து இளம்பிள்ளைக்கு புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் போக்குவரத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த பஸ் ஓமலூரில் இருந்து இளம்பிள்ளைக்கு வந்தது. அதனை கே.கே.நகர் பகுதியில் இடங்கணசாலை பேரூராட்சி அ.தி.மு.க. சார்பாக வரவேற்று பஸ்சிற்கு மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும், பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும் வரவேற்றனர். இதேபோல இ.மேட்டுகாடு, இடங்கணசாலை பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் அந்த பஸ்சிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இடங்கணசாலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவலிங்கம், பேரூர் செயலாளர் அண்ணாமலை, இணை செயலாளர் கே.கே.நகர். முத்து, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வேடியப்பன், வார்டு செயலாளர்கள் ராஜேந்திரன், ராமலிங்கம், இளைஞர் பாசறை செயலாளர் ரமேஷ், மகளிர் அணி வசந்தி மற்றும் ரங்கநாதன், பாலு, சின்னாகவுண்டர் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story