தர்மபுரியில் பயங்கரம் : தொழிலாளி குத்திக்கொலை,மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு
தர்மபுரியில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தர்மபுரி,
தர்மபுரியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 24). தர்மபுரியில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கும், சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு இவர் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியில் உள்ள மைதானத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர் அவரை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார். நரசிம்மன் கீழே விழுந்து மயங்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் நரசிம்மனை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். நரசிம்மனை கத்தியால் குத்திய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story